TVK Vijay
இன்று உங்களிடம் இருக்கும் சொத்து எவ்வளவு?
- Read more about இன்று உங்களிடம் இருக்கும் சொத்து எவ்வளவு?
- Log in or register to post comments
சேலத்தில் தவெக நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சி நேரலை.
பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் விழாக்களை நடத்துவது தான் உண்மையான மக்கள் அரசியல். தலைமை கூறிய அறிவுறுத்தலை அனைவரும் கடைப்பிடிப்போம்.
சர்வே எடுக்க சென்ற த.வெ.க-வினரை தாக்கிய தி.மு.க.வினர்..
சென்னை, பாரிமுனைப் பகுதியில் கள ஆய்வில் ஈடுபட்ட தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் மீது, ஆளும் கட்சியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட ரவுடிகள் அராஜகத் தாக்குதல் நடத்தியிருப்பது கடும் கண்டனத்திற்கு உரியது.
இந்தத் தாக்குதலில், நான்கு மாதக் கர்ப்பிணி உள்பட நிர்வாகிகள் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர், அவர்கள் அவசர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் நான்கு பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். படுகாயம் அடைந்த கழகத் தோழர்கள் ஆறு பேரும் விரைவில் குணமடைய விழைகிறேன்.
- Read more about சர்வே எடுக்க சென்ற த.வெ.க-வினரை தாக்கிய தி.மு.க.வினர்..
- Log in or register to post comments
தமிழக வெற்றிக் கழகம் மூன்றாம் ஆண்டுத் தொடக்க விழா நேரலை.
என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கு,
வணக்கம்.
நம் உயிரனைய இயக்கமான தமிழக வெற்றிக் கழகத்தின் மகிழ்ச்சிகரமான மூன்றாம் ஆண்டு, இன்று தொடங்குகிறது. இரண்டு ஆண்டுகளை இயல்பாகவும், இயல்பு தாண்டியும் நிறைவு செய்து, நீள்கிறது நம் அரசியல் பெரும்பயணம்.
முதன்மை அரசியல் சக்தியாகப் பரிணமிக்கும் முன்பே மக்கள் இயக்கமாக, மக்களோடு மக்களாகக் கலந்து நின்றவர்கள் நாம். இதை நாடறியும். நல்லவர்கள் அறிவார்கள்.
